கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களே தற்போது நாட்டின் பயங்கரவாதிகள் என அரசாங்கம் சித்தரிப்பதாக விசனம் வெளியிட்டுள்ளார் நாமல் ராஜபக்ச.
திலும் அமுனுகம பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டமை தொடர்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ள அவர், குறித்த பொலிஸ் பிரிவினை மூடிவிடப் போவதாக தெரிவித்தவர்கள் கூட்டு எதிர்க்கட்சியினரை விசாரிப்பதற்காக அதனை மீளத் திறந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான திட்டமிட்ட இனவிரோத செயற்பாடுகளின் பின்னணியில் திலும் அமுனுகம தொடர்புபட்டிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டு வந்த நிலையில் நேற்றைய தினம் அவர் 12 மணி நேர விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment