
லிபியாவின் நிலையை வடகொரியாவுக்கும் உருவாக்கப் போவதாக ட்ரம்ப் நிர்வாகம் தெரிவித்து வந்த நிலையில் பேச்சுவார்த்தை தொடர்பில் வடகொரியா சந்தேகம் வெளியிட்டு வந்தது.
எனினும், அமெரிக்காவுடன் இணங்கியபடி தமது அணுஆயுத பரிசோதனைத் தளத்தை இன்று வடகொரியா நிர்மூலமாக்கியுள்ள நிலையில் பேச்சுவார்த்தை திட்டத்திலிருந்து தாம் விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார் ட்ரம்ப்.
ஜுன் 12ம் திகதி சிங்கப்பூரில் ட்ரம்ப் - கிம் சந்திப்பு இடம்பெறும் என எதிர்பார்ப்பு உருவாக்கப்பட்டிருந்தது. எனினும் அணு ஆயுத பரிசோதனைத் தளம் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் முன்னிலையில் நிர்மூலமாக்கப்பட்டதன் பின்னர் ட்ரம்ப் விலகிக்கொள்வதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment