பதவி நீக்கப்பட்ட விஜேதாச ராஜபக்சவுக்கு உயர் கல்வி அமைச்சு பொறுப்பளிக்கப்பட்டுள்ள நிலையில் ரவி கருணாநாயக்க ஒதுக்கப்பட்டுள்ளாரா என்ற கேள்வியெழுந்துள்ளது.
இந்நிலையில் ஓரிரு நாளில் நல்ல செய்தி வரும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார் முன்னாள் நிதியமைச்சரும் மத்திய வங்கி விவகாரத்தில் இராஜினாமா செய்தவருமான ரவி கருணாநாயக்க.
உள்ளூராட்சித் தேர்தலின் போது வடகொழும்பில் தனது ஆளுமையை நிரூபித்ததுடன் தொடர்ந்தும் ஐக்கிய தேசியக் கட்சியின் உதவித் தலைவர் பதவியைத் தக்க வைத்துக்கொண்டுள்ள ரவி இன்று அமைச்சராக பதவியேற்பார் என அவரது ஆதரவாளர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment