தனது அமைச்சின் கடமையில் யாரையும் தலையிட அனுமதிக்கப் போவதில்லையென தெரிவித்துள்ளார் அமைச்சர் சரத் பொன்சேகா.
வனஜீவராசிகள் அமைச்சராக பொறுப்பேற்ற சரத் பொன்சேகா, தனககு சட்ட ஒழுங்கு அமைச்சு தரப்படாமை குறித்து அலட்டிக் கொள்ளப் போவதில்லையெனவும் தான் திருப்தியாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தனது கடமைகளில் யாரும் தலையிட விடப் போவதில்லையென இன்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
1 comment:
வன ஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சராகிய உங்களிடம் நாம் வேண்டுவது, எமது தேசியக்கொடியில் ஓர் வன ஜீவராசியின் படம் இருப்பது சரியானதுதானா என்பதை மீள் பரிசீலனை செய்யுங்கள்.
மேலும், மீண்டும் வன ஜீவராசிகள் பெயர்களில் மனிதர்கள் பிரிந்திருந்து யுத்தம் செய்யாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
அத்தோடு, ஏற்கனவே வன ஜீவராசியின் பெயரில் உரிமைக்காகப் போராடி உயிர்களைத் தியாகம் செய்த தமிழ்ச் சகோதரர்களின் நியாயமான உரிமைகளை, தாமதமில்லாது அளித்து விடும்படி அமைச்சரவைக்குள் இருந்து அரசாங்கத்தை வலியுறுத்திப் பெற்றுக் கொடுங்கள்.
உயிர்களின் பெறுமதிகளையும் அவற்றைத் தியாகம் செய்ததன் நோக்கங்களையும், அதன் வலியையும் ஏனையோரை விட அதில் நேரடியாகச் சம்பந்தப்பட்டவர் என்ற ரீதியில் நீங்கள் நன்கு அறிந்தவர் என்ற அடிப்படையில் இந்த வேண்டுகோளை உங்களிடம் முன் வைக்கிறோம்.
Post a Comment