அமைச்சரவை மாற்ற அறிவிப்பு எதிர்பார்க்கப்படும் தருணத்தில் முன்னாள் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்சவும் ஜனாதிபதி செயலகத்துக்கு வருகை தந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீதியமைச்சராக இருந்து கொண்டு மஹிந்த ராஜபக்ச அரசின் ஊழல் விசாரணைகளுக்குத் தடையாக இருப்பதாக தெரிவித்து விஜேதாச பதவி நீக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவரது வருகை அமைந்துள்ளமையும் சற்று நேரத்தில் புதிய அமைச்சரவை அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment