ஊழலிருந்து நாட்டைக் காப்பாற்ற 92 வயதான மஹதிர் முஹம்மதை மீண்டும் மலேசிய மக்கள் பிரதமராக்கியுள்ள நிலையில் அதிரடியாக தொடர் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
இதன் பின்னணியில் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்குடன் தொடர்பு பட்ட வீடுகளிலிருந்து பெருந்தொகை சொகுசு பொருட்கள் மற்றும் வெளிநாட்டு நாணயத் தாள்களினால் நிரப்பப் பட்ட கைப்பைகள், உல்லாச பாவனைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் அவரது ஆட்சியில் மூடப்பட்ட நஜிப் ரசாக் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் மீண்டும் விசாரணைக்குட்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையிலும் மஹிந்த அரசின் ஊழல்களுக்குத் தண்டனை வழங்கப் போவதாகக் கூறி ஆட்சி பீடமேறிய ஐக்கிய தேசியக் கட்சி - ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டரசு இதுவரை எந்த காத்திர நடவடிக்கைகளையும் மேற்கொள்வில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment