அண்மையில் அரச மரக்கூட்டுத்தாபன தலைவராக நியமிக்கப்பட்டு, பதவி நீக்கப்பட்ட நிலையில் அண்மையில் கைதான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அநுருத்த பொல்கம்பொல பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
வடபகுதி ரயில்வே திட்ட ஊழலின் பின்னணியில் கடந்த நவம்பர் மாதமும் கைதாகி விடுதலையான குறித்த நபர் அண்மையில் அரச மரக்கூட்டுத்தாபன தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையிலேயே முன்னாள் வழங்கப்பட்ட பிணை நிபந்தனைகளை மீறியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு மீண்டும் கடந்த 15ம் திகதி அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment