56 கோடி ரூபா லஞ்சப் கோரி, அதனை 20 கோடி ரூபா வரை சலுகை விலையில் குறைத்துக் கொண்டு முற்பணமாக 2 கோடி ரூபா பெற்ற வேளையில் கையும் களவுமாக அகப்பட்ட ஜனாதிபதி செயலக பிரதானி மகநாம மற்றும் அரச மரக்கூட்டுத்தாபன தலைவர் திசாநாயக்கவுக்கு மூன்று மாதங்களாக வலை வீசிக் காத்திருந்ததாக தகவல் வெளியிட்டுள்ளது லஞ்ச ஆணைக்குழு.
சம்பந்தப்பட்ட வர்த்தகர் பெப்ரவரி முற்பகுதியில் லஞ்ச ஆணைக்குழுவின் முறையிட்டதாகவும் அவ்வப்போது தமது பேரத்தை உயர்த்தியும் குறைத்தும் லஞ்சம் கோரிய குறித்த நபர்கள் ஈற்றில் 20 கோடி ரூபாய்க்கு இணங்கிக் கொண்டதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் 2 கோடி ரூபா முற்பணத்தை கொழும்பு தாஜ் சமுத்ரா வாகன தரிப்பிடத்தில் வைத்துப் பெற முயன்ற நிலையில் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment