சர்ச்சைக்குரிய நபராகக் காணப்பட்டு பதவி நீக்கப்பட்ட விஜேதாச ராஜபக்சவுக்கு புதிய அமைச்சரவையில் உயர் கல்வி மற்றும் கலாச்சார அமைச்சு கையளிக்கப்பட்டுள்ளது.
நீதியமைச்சராக இருந்த விஜேதாச ராஜபக்ச, மஹிந்த அரசின் ஊழல் விவகாரங்களை விசாரிப்பதற்கும் தண்டனை வழங்குவதற்கும் தடையாக இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டு பதவி நீக்கப்பட்டிருந்தார்.
அதன் பின் மஹிந்த தரப்பின் கருத்துக்களை பிரதிபலித்து வந்திருந்த அவர், கடந்த உள்ளூராட்சித் தேர்தலின் பின் மீண்டும் கட்சியோடு ஐக்கியமாகி தற்போது அமைச்சுப் பொறுப்பையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment