பலஸ்தீனத் தாயிடமிருந்து....... - sonakar.com

Post Top Ad

Friday, 18 May 2018

பலஸ்தீனத் தாயிடமிருந்து.......



தென்றலையே
அழ வைக்கும் - என்
மழலைகளின் அழு குரல்
உலக வீட்டின் உறுப்பினர்கள்
செவிகளில் விழவில்லையா...?

எனது
குடியிருப்புக்களில்
அத்துமீறி வந்தமர்ந்த
நரகத்து அரக்கர்களின்
துப்பாக்கிச் சன்னங்கள்
தேசத்து மலர்களைக் குடிக்கிறதே..!

மனிதமே..!
உலகப் பொலிஸ்காரனின்
மிச்சத்தில் வளர்ந்த
ஓநாய்களின்
வேட்டைகளால் குதறப்படும்
புருசர்களின் உதிரம் - என்னை
செந்நிறமாக்குகிறதே...!

சாத்தான்களின்
சாக்கடைகளில்
சல்லாபம் போடும்
அரபியச் சீமான்களே...!
சல்லடையிடப்படும்
என் வீர மைந்தர்களின்
கரங்களை வலிமையாக்க
இன்னும் ஏன் தயக்கம்...?

சோதரரே...!
மேற்குலகின்
முதலைக் கண்ணீர் -  உங்கள்
உணர்ச்சிகளைத் தடுக்க வேண்டாம்...!
அடக்கி ஒடுக்கும்
இஸ்ரேல் அதர்மவாதிகளை
எதிர்த்துப் போராடும் - என்
போராட்ட வீரர்களுக்கு கைகொடுங்கள்..!
பறிக்கப்பட்ட – எனது
முகவரியை மீட்பதற்காய்...

என்னை மீட்டெடுப்பதற்காய்
உயிர்துறக்கும்
புத்திரரர்;களே..!
நீங்கள் சிந்தும்
உதிரத்திற்கு பரிசு
நிச்சம் உள்ளது.
பலஸ்தீனர்களின் வெற்றிகொடி
பறிக்கப்பட்ட மண்ணெங்கும்
பறக்கும் நாள் விரைவினிலேதான்
அது வரை
போராடுங்கள் புதல்வர்களே...!
வல்ல இறைவன் துணைகொண்டு...

'முனையூரான்' – எம்.எம்.ஏ.ஸமட்

No comments:

Post a Comment