சிரிய கடலோரப் பகுதியில் ரஷ்ய இராணுவ விமானமொன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த விமானிகள் இருவரும் உயிரிழந்தள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது ரஷ்யா.
விமானத்தில் பறவை மோதியதனால் இவ்விபத்து ஏற்பட்டதாகவும் அப்பகுதியில் வேறு தாக்குதல் சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லையெனவும் ரஷ்யா மேலும் விளக்கமளித்துள்ளது.
சிரிய அதிபர் பஷர் அல் அசாதுக்கு எதிரான உள்ளாட்டு யுத்தம், ரஷ்ய தலையீட்டின் பின்னர் கிளர்ச்சிக்குழுக்களுக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment