
கிளிநொச்சி பகுதியில் புதையல் தோண்டச் சேர்ந்த ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இதில் மூவர் சட்டவிரோதமாக இலங்கையில் தங்கியிருந்த இந்தியர்கள் எனவும் தர்மபுரம் பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நிலையில் இக்கைது இடம்பெற்றதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
விடுதலைப் புலிகளினால் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் தங்கத்தைத் தேடியும் அவ்வப்போது இவ்வாறான குழுக்கள் புதையல் வேட்டையில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment