வட இந்திய மாநிலங்களாக உத்தர பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் ஏற்பட்ட புழுதிப் புயலால் இதுவரை வெளியான தகவல்களின் அடிப்படையில் 95 பேர் பலியாகியுள்ளனர்.
நேற்றிலிருந்து குறித்த பிரதேசங்களில் கோரமான முறையில் தாக்கி வரும் புழுதிப் புயலினால் பல இடங்களில் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதுடன் பாரிய அளவில் மின்னல் தோன்றி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோடை காலத்தில் புழுதிப் புயல் உருவாவது வழக்கமாக இருப்பினும் இம்முறை பெருமளவு உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment