500 கிராமிய பாலங்களை புனரமைக்க நடவடிக்கை - sonakar.com

Post Top Ad

Sunday, 27 May 2018

500 கிராமிய பாலங்களை புனரமைக்க நடவடிக்கை



கிராமங்களில் உள்ள 500 பாலங்களை புனரமைக்கவென ஜக்கிய இராச்சியம் மற்றும்  நெதா்லாந்து  ஆகிய நாடுகளின் கம்பணிகளுடன் மாகாண சபைகள்,  உள்ளூராட்சி மற்றும்  விளையாட்டுத் துறை அமைச்சு,  இரண்டு ஒப்பந்தங்களில்  கடந்தவாரம்  கொழும்பில்  கைச்சாத்திட்டது. 

இத்திட்டதிற்காக இங்கிலாந்து கம்பனி  250 பாலங்களை நிர்மாணிக்கவென 50 மில்லியன் ஸ்ரேலிங் பவுன், நெதா்லாந்து நாட்டைச் சேர்ந்த  கம்பனி ஒன்று  50 மில்லியன் ஈயுரோக்களை வழங்குகின்றது. அமைச்சா் பைஸர்  முஸ்தபாவின் நடவடிக்கையின் பயனாக இந்த அபிவிருத்தித் திட்டங்கள்  இலங்கைக்கு கிடைக்கின்றது. இதனால்,  அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத நிலையில்  கிராமங்களில் அமைந்துள்ள  பலகையிலான  மற்றும் தொங்கு பாலங்கள், சேதமாகியுள்ள  பாலங்கள் உள்ளிட்ட  கிராமத்துக்குக்  கிராமம் செல்ல முடியாத நிலையிலுள்ள  பாலங்கள் போன்றவற்றை  அடையாளங்கண்டு, அவ்விடங்களில் புதிய பாலங்களை  நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் அமைச்சினால் எடுக்கப்பட்டுள்ளன. 




இதேவேளை, இந்நிகழ்வின்போது  புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட 8,500 உள்ளூராட்சி உறுப்பினா்களுக்காக ஐக்கிய அமெரிக்க நாட்டின் உதவித்திட்டத்தின் கீழ் உள்ளூராட்சி சட்ட திட்டங்கள் நிதி, மற்றும் கடமை பொறுப்புக்கள் பற்றிய  கை நுால் ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது.  இந் நுாலின் முதற்பிரதியை,  அமைச்சின் பணிப்பாளா், நெதர்லாந்து பிரதித் துாதுவாிடம் கையளித்தார். இந்நிகழ்வில்,  அமைச்சின் செயலாளா் கமல் பத்மசிறி  மற்றும் ஐக்கிய இராச்சியம், நெதா்லாந்து கம்பனிகளின் பணிப்பாளா்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனா். 


-ஐ. ஏ. காதிர் கான்

No comments:

Post a Comment