ஜே.வி.பியினால் கொண்டு வரப்பட்டு 20ம் சட்டத் திருத்தப் பிரேரணைக்கு ஜாதிக ஹெல உறுமயவின் முன்னாள் உறுப்பினர் உதய கம்மன்பிலவும் அக்கட்சியும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.
தேர்தல் முறையில் மாற்றம் கொண்டுவரப்படாமல் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையில் மாற்றத்தைக் கொண்டுவருவதால் பிரயோசனமில்லையென சம்பிக்க ரணவக்க தெரிவிக்கின்ற அதேவேளை, அநுர குமார திசாநாயக்க தன்னோடு பகிரங்கமாக இது தொடர்பில் விவாதிக்க முன் வர வேண்டும் என கம்மன்பில கோரியுள்ளார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கும் வாக்குறுதியுடனேயே பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேன தேர்தலில் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment