
திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வயல் வெளியில் வேலை செய்து கொண்டிருந்தவர் மின்னல் தாக்கி பலியாகியுள்ளதாக தம்பலாகாமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நான்காம் வாய்க்கால் பகுதியைச் சேர்ந்த என்.எம்.முனீஸ் வயது (20) டைய என்ற இளைஞரே மின்னல் தாக்கத்திற்குள்ளாகி பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இச்சம்பவம் நேற்று(17) மாலையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவரின் சடலம் கந்தளாய் தள வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு உறவினர்களிடம் சடலத்தினை கையளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு,சம்பவம்தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
-எப்.முபாரக்
No comments:
Post a Comment