இவ்வருட புனித ஹஜ் கடமைக்காக இலங்கையிலிருந்து செல்லும் ஹஜிகளை அழைத்துச் செல்லும் ஹஜ் முகவவர்களுக்கு இன்று (02) கோட்டா பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் ஏ.எச்.அப்துல் ஹலீம் தலைமையில் இன்று மாலை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் வைத்து வழங்கப்ப்டது. ஹஜ் குழுவினால் நேர்முகப் பரீட்சைகள் மூலம் தெரிவு செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்ட 95 முகவர் நிலையங்களுக்கே இக்கோட்டா பகிர்ந்தளிக்கப்பட்டன.
திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட சுமார் 107 முகவர் நிலையங்களில் ஹஜ் குழுவினால் 95 முகவர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தெரிவு செய்யப்பட முகவர் நிலையங்களுக்கு 2800 ஹாஜிகளுக்கான கோட்டா பகிர்ந்தளிக்கும் நிகழ்வில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஆர்.எம்.மலிக், ஹஜ் குழுத் தலைவர் டொக்டர் ஸியாத் தாஹா மற்றும்; வை.எல்.எம்.நவவி உள்ளிட்ட ஹஜ் குழுவின் உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர்.
-ஏ.எஸ்.எம்.ஜாவித்
No comments:
Post a Comment