20 வந்தாலும் 2020 வரை ரணிலின் பதவிக்கு ஆபத்தில்லை: அநுர - sonakar.com

Post Top Ad

Friday, 18 May 2018

20 வந்தாலும் 2020 வரை ரணிலின் பதவிக்கு ஆபத்தில்லை: அநுர


20ம் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டாலும் 2020 ஜனவரி மாதம் 9ம் திகதி வரை ரணிலின் பிரதமர் பதவிக்கு எந்த ஆபத்தும் வரப் போவதில்லையென தெரிவிக்கிறார் ஜே.வி.பி தலைவர் அநுர குமார திசாநாயக்க.


நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கும் அடிப்படையிலான குறித்த சட்டத் திருத்தத்தினை ஜே.வி.பி நாடாளுமன்றில் தனி நபர் பிரேரணையாக முன் வைக்கவுள்ளது. எனினும், அதனை 2020 ஜனவரி 9ம் திகதிக்குப் பின்னரே நடைமுறைப்படுத்தலாம் என்பதோடு அன்றைய தினம் நாடாளுமன்றமும் கலைக்கப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.

இந்நிலையில், அதன் பிறகே கூடுதல் அதிகாரமுள்ள பிரதமர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார் எனவும் அநுர குமார தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment