மத்திய வங்கியில் கொள்ளையடித்து விட்டு அர்ஜுன் மகேந்திரன் சிங்கப்பூரில் சுதந்திரமாக உலவிக் கொண்டிருக்க, தான் 18 பில்லியன் டொலரை இன்னும் ஒளித்து வைத்திருப்பதாக அரசாங்கம் தெரிவித்து வருவது வேடிக்கையானது என்கிறார் மஹிந்த ராஜபக்ச.
அரசிடம் அது பற்றிய தகவல் இருப்பின், தாராளமாக அந்த பணத்தைக் கொண்டு வந்து நாட்டு மக்களுக்காக செலவு செய்து வரிச்சுமையைக் குறைப்பதுடன் அத்தியாவசிய பொருட்களின் விலைகளையும் குறைக்கலாம் என அறிவுரை கூறுகிறார் மஹிந்த.
பலபிட்டியவில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்தே மஹிற்த இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment