கூட்டாட்சியின் எதிர்காலம் எங்கள் கையில்: குரூப் 16! - sonakar.com

Post Top Ad

Saturday, 19 May 2018

கூட்டாட்சியின் எதிர்காலம் எங்கள் கையில்: குரூப் 16!


கூட்டாட்சியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடர்ந்தும் நீடிப்பதா இல்லையா எனும் முடிவை மேற்கொள்ளும் படி குரூப் 16 உறுப்பினர்களை ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜயசேகர.



ஐக்கிய தேசியக்கட்சியிடனான ஆட்சிப் பங்கீட்டை முடித்துக் கொள்ள வேண்டும் என குரூப் 16 உறுப்பினர்கள் அண்மைக்காலமாக தெரிவித்து வருகின்றனர்.

நம்பிக்கையில்லா பிரேரணையில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக வாக்களிக்கும் வரை குரூப் 16 உறுப்பினர்களும் கூட்டாட்சியில் பங்கெடுத்திருந்ததோடு அமைச்சுப் பதவிகளையும் வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment