பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையின் போது வாக்களித்திருந்த 16 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுறுப்பினர்களும் தனிக்குழுவாக இயங்கி வரும் நிலையில் சு.கவிலிருந்து மேலும் 10 பேர் தம்மோடு இணைந்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் எஸ்.பி. திசாநாயக்க.
மஹிந்த ராஜபக்ச நியமிக்கும வேட்பாளருக்கே அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தமது தரப்பு ஆதரவளிக்கப்போவதாகவும் தெரிவிக்கின்ற அவர், கூட்டு எதிர்க்கட்சியின் அரசியல் நடவடிக்கைகளை குரூப் 16 ஆதரிக்கும் எனவும் தனிக்குழுவாக இயங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அவரவர் விரும்பிய முடிவை எடுக்கும்படி ஜனாதிபதி தெரிவித்திருந்ததாக அண்மையில் தயாசிறி கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment