சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 127 இலங்கையர்கள் உட்பட 131 பேர் கொண்ட குழு மலேசிய பொலிசாரினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
98 ஆண்கள், 24 பெண்கள் மற்றும் ஒன்பது குழந்தைகள் இக்குழுவில் அடங்குகின்ற அதேவேளை 127 இலங்கையர் இதில் உள்ளடக்கம் என மலேசிய பொலிசார் தெரிவிக்கின்றனர்.
2017 முதல் சட்டவிரோதமாக ஆட்கடத்தும் இவ்வியாபாரம் இடம்பெற்று வருவதாகவும் கன்டைனர் ஒன்றில் அடைத்து வைத்து இக்கடத்தல் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment