
நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையால் உயிரிழந்தோர் தொகை 13 ஆக உயர்ந்துள்ளது.
மழை - மின்னல் - காற்று - வெள்ளம் என இயற்கை அனர்த்தத்தால் 27,064 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 105,352 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், பல இடங்களில் தற்காலிக முகாம்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளமையும் நிவாரண நடவடிக்கைகள் மாவட்ட செயலகங்கள் ஊடாக ஒருங்கிணைக்கப்பட்டு வருவதாக அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment