10 முதல் 20 வீதம் வரை பேருந்து கட்டணங்களை அதிகரிக்கக் கோரி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தில் குதிக்கவிருந்த நிலையில் அரசுடனான பேச்சுவார்த்தைகளின் பின்னணியில் 12.5 வீத கட்டண உயர்வுக்கு இணக்கம் காணப்பட்டுள்ளதுடன் வேலை நிறுத்தமும் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம், தொழிற்சங்கம் மற்றும் அமைச்சர் மட்ட கலந்துரையாடலின் பின்னணியில் இவ்வாறு இணக்கம் காணப்பட்டுள்ளது.
முன்னதாக 6.5 வீத கட்டண உயர்வுக்கு அமைச்சரவை இணக்கம் வெளியிட்டிருந்த நிலையில் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment