
நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற ஐவர் கடந்த சில நாட்களுக்குள் உயிரிழந்துள்ள அதேவேளை கடந்த 28 நாட்களுக்குள் உயிரிழந்தோர் தொகை 12 ஆக உயர்ந்துள்ளது.
தென் பகுதியில் பரவிய மர்மக் காய்ச்சலின் பின்னணியில் பாடசாலைகள் மூடப்பட்டிருந்ததோடு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
எனினும், பலர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் திடீர் மரண விசாரணை அதிகாரி லலித் டி சில்வா தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment