யாழ்ப்பாண மாவட்டத்தில் போரால் பாதிக்கப்பட்ட, வறிய குடும்பங்களை சேர்ந்த 110 பிள்ளைகளுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்படவுள்ளதாக இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி இன்று (05) தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மூன்று தசாப்தகால போரால் பாதிக்கப்பட்ட மிக வறிய குடும்பத்தில் வாழ்ந்து கொண்டு தங்களின் கல்வி மற்றும் ஏனைய விடயங்களை செய்வதற்கு பல சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். அவர்களின் கல்வி நடவடிக்கைகளை ஊக்குகின்ற வகையில் தனது எண்ண கருவுக்கு அமைவாகவே குறிப்பிட்ட குடும்பத்தில் வாழ்கின்ற பிள்ளைகளுக்கு இந்த துவிச்சக்கர வண்டிகளை தான் வழங்கப் போவதாகவும் அவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகளை நாளை ஞாயிற்றுக்கிழமை (06) இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தலைமையகத்தில் வைத்து வழங்கி வைக்கவுள்ளதாகவும் கூறினார்.
பயனாளிகளில் யாவரும் ஜனநாயக போராளிகள் கட்சியின் பரிந்துரைக்கு அமைவாக தெரியப்பட்டுள்ளமையும் இப்பயனாளிகளில் செம்பியன்பற்று ரோமன் கத்தோலிக்க பாடசாலையில் தரம் 06 இல் கல்வி பயிலும் மாணவியான பிரபாகரன் துவாரகாவும் இதில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
விசேட அழைப்பின் பேரில் அம்பாறை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் சங்க பிரதிநிதிகளும் இந்த வைபவத்தில் பங்கேற்கவுள்ளனர் என்பதுன் விஷேட அம்சமாகும்.
-பைஷல் இஸ்மாயில்
No comments:
Post a Comment