கடந்த வாரம் சிரியாவில் இடம்பெற்ற இரசாயன தாக்குதலின் பின்னணியில் அந்நாடு மீது அமெரிக்கா - பிரான்ஸ் மற்றும் ஐக்கிய இராச்சியம் இணைந்து வான் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.
இரசாயன ஆயுதங்கள் தெழிற்சாலை எனக் கருதப்படும் ஆய்வகம், களஞ்சியம் மற்றும் கட்டளைப் பணியகம் என மூன்று இலக்குகள் மீது இவ்வாறு தாக்குதல்கள் நடாத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, தமது எச்சரிக்கையையும் மீறி நடாத்தப்பட்ட தாக்குதல்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என தெரிவித்துள்ள ரஷ்யா, தாக்குதல் நடாத்துவதற்காகவே இரசாயன தாக்குதல் எனும் நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment