UNP அழுத்தத்துக்கு இடங்கொடுக்க மாட்டோம்: மஹிந்த அமரவீர - sonakar.com

Post Top Ad

Monday, 9 April 2018

UNP அழுத்தத்துக்கு இடங்கொடுக்க மாட்டோம்: மஹிந்த அமரவீர


ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை நீக்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியினர் பிரயோகித்து வரும் அழுத்தத்துக்கு இடங்கொடுக்கப் போவதில்லையென தெரிவித்துள்ளார் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு செயலாளர் மஹிந்த அமரவீர.



பிரேரணையை ஆதரித்து வாக்களித்த 16 பேரையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியனர் தெரிவித்து வருகின்ற அதேவேளை குறித்த நபர்களுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையையும் கையளித்திருந்தனர்.

குறித்த பிரேரணையை வாபஸ் பெறுமாறு ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தியும் இரு தரப்பும் கருத்துப் போரில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment