நம்பிக்கையில்லா பிரேரணையின் பின் உடனடியாக ஐக்கிய தேசியக் கட்சியில் முழு அளவிலான நிர்வாக மாற்றம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அதற்கான பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகள் நாளைய தினத்துக்குள் முன் வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் பின்னணியில் மாத இறுதிக்குள் அனைத்து நிர்வாக பதவிகளிலும் மாற்றங்கள் ஏற்படும் என ஐக்கிய தேசியக் கட்சி பின் வரிசை உறுப்பினர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
புதியவருக்கு வழி விடும் வகையில் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து கபீர் ஹாஷிம் விலகிக் கொள்வதாக அறிவித்துள்ள அதேவேளை கட்சியின் 2020 ஜனாதிபதி வேட்பாளரையும் நாளைய தினம் தீர்மானிக்க வேண்டும் என கட்சி மட்டத்தில் வலியுறுத்தப்பட்டு வருவதாக அறியமுடிகிறது.
No comments:
Post a Comment