பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும் எனும் ஸ்ரீலசுகட்சி நாடாளுமன்ற குழுவின் தீர்மானம் பற்றி எந்தக் கவலையுமில்லையென தெரிவிக்கிறது ஐக்கிய தேசியக் கட்சி.
எந்தவித அழுத்தத்துக்கும் அடிபணியப் போவதில்லையெனவும் நம்பிக்கையில்லா பிரேரணையை முறியடித்து வெற்றிகாணப் போவதாகவும்வும் ஐக்கிய தேசியக் கட்சி தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு 106 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு ஏலவே இருப்பதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் ஆகக்குறைந்தது ஏழு வாக்குகளால் ரணில் தோற்பார் என கூட்டு எதிர்க்கட்சியின் கம்மன்பில தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment