ஐக்கிய தேசியக் கட்சியோடு இணைந்திருப்பது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முழுமையாகப் புறக்கணிக்கப்படுவதற்கான சூழ்நிலையையே உருவாக்கும் என தெரிவித்துள்ளார் முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜயசேகர.
நம்பிக்கையில்லா பிரேரணையில் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக வாக்களித்த நிலையில் குரூப் 16 உறுப்பினர்கள் தமது அமைச்சுப் பதவிகளைத் துறந்துள்ளனர். இந்நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் உறவை முறித்துக் கொள்ள வேண்டும் என குறித்த குழுவினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இதேவேளை, குரூப் 16 தம்மோடு இணைந்து கொள்ளவுள்ளதாக மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment