ஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சியமைக்கு இடமளிக்க வேண்டும் என முன்னதாக எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்திருந்த நிலையில் அதனை ஆமோதித்து ஆதரவு வெளியிட்டுள்ளார் டிலான் பெரேரா.
கூட்டாட்சியிலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விலகிக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தற்போது நாடாளுமன்ற பெரும்பான்மையுள்ள ஐக்கிய தேசியக் கட்சிக்கு தனித்து ஆட்சியமைக்கும் வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர் குரூப் 16 உறுப்பினர்கள்.
இதேவேளை பிரளயத்தில் ஈடுபட்ட சு.க உறுப்பினர்கள் அடுத்த நாடாளுமன்ற அமர்வில் எதிர்க்கட்சி வரிசையில் இணைந்து கொள்வார்கள் என மஹிந்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment