பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பகிரங்கமாக விமர்சித்து வரும் திலங்க சுமதிபால நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பின் போது சபாநாயகர் ஆசனத்தில் அமரக் கூடாது என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
மீறியும் அமர்ந்தால் தமது கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றிலிருந்து வெளிநடப்பு செய்ய நேரிடும் எனவும் அக்கட்சி சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
கூட்டு எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் 4ம் திகதி விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள அதேவேளை அன்றைய தினம் திலங்க சபாநாயர் ஆசனத்தில் அமர்வதற்கே இவ்வெதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment