UK: முஸ்லிம் அமைப்புகளிடையே புரிந்துணர்வை உருவாக்க பேச்சுவார்த்தை - sonakar.com

Post Top Ad

Wednesday, 25 April 2018

UK: முஸ்லிம் அமைப்புகளிடையே புரிந்துணர்வை உருவாக்க பேச்சுவார்த்தை



ஐக்கிய இராச்சியத்தில் நீண்டகாலமாக தனித்தனி பாதைகளில் இயங்கி வரும் முக்கிய அமைப்புகளிடையே புரிந்துணர்வை உருவாக்கும் வகையில் விசேட சந்திப்பொன்று சமூக ஆர்வலர்கள் குழுவொன்றினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அண்மைய ஜனாதிபதியின் லண்டன் விஜயத்தின் போது இரு வேறு அணுகுமுறைகள் கையாளப்பட்டிருந்த அதேவேளை இது சரிவரப் புரிந்து கொள்ளப்படாததன் நிமித்தம் சமூக வலைத்தளங்களிலும் பல்வேறு சர்ச்சைகள் உருவாகியிருந்தது.



இந்நிலையில், முக்கிய அமைப்புகள் ஓரிடத்தில் அமர்ந்து எதிர்கால நடவடிக்கைகளின் போது ஒருவரோடொருவர் முரண்பட்டுக் கொள்ளாத வகையில் நடந்து கொள்வதற்கான புரிந்துணர்வை உருவாக்கும் வகையில் இச்சந்திப்பு திட்டமிடப்பட்டுள்ளது.

விரைவில் இடம்பெறவுள்ள இச்சந்திப்பின் முன்னெடுப்பை சமூக ஆர்வலர் யூனுஸ்  மேற்கொண்டிருந்த நிலையில் SLMAS (UK) இதற்கான அனுசரணையை வழங்கியுள்ளதுடன் சோனகர்.கொம் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நெறிப்படுத்தும் பொறுப்பையும் ஏற்றுள்ளது.

நீண்டகாலமாக இதற்கான முன்னெடுப்புகள் செய்யப்பட்டு வந்த போதிலும் அண்மைய சர்ச்சைகளின் பின்னணியில் முக்கிய அமைப்புகள் இணக்கம் தெரிவித்துள்ளதன் பின்னணியில் தற்போது இது கைகூடி வந்துள்ளது. சந்திப்பு விபரங்கள் மற்றும் தொகுப்பு குறித்த சந்திப்பு நிகழ்ந்த பின்னர் வெளியிடப்படும்.

No comments:

Post a Comment