UK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்! - sonakar.com

Post Top Ad

Tuesday, 17 April 2018

UK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்!


இலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள லண்டன் சென்றுள்ள மைத்ரிபால சிரிசேன அங்கு புலம்பெயர்ந்து வாழும் முஸ்லிம்கள் அமைப்பைச் சந்திக்க இணக்கம் தெரிவித்திருந்தார்.

எனினும், முஸ்லிம் சமூகம் ஒற்றுமையின்றி இருக்கிறது எனும் ஒரு போர்வையை உருவாக்குவதற்கு தீவிரமாக உழைத்த லண்டன் இலங்கைத் தூதரகம் தமது அனுசரணையில் 'கொஸ்மோ' என பெயரிடப்பட்டு தூதரகத்துக்கு வேண்டிய வாழ்நாள் உறுப்பினர்களைக் கொண்டு நடாத்தப்படும்  குழுவையும் ஜனாதிபதியை இன்று (17)  சந்திக்க வைத்து போட்டியை உருவாக்க முனைந்தது. 



இந்நிலையில், ஐக்கிய இராச்சியத்தின் புலம்பெயர்ந்து வாழும் முஸ்லிம்களுக்கான அமைப்பு சார்பில் கலந்து கொண்ட உலமா, சட்டத்தரணி, ஊடகவியலாளர் மற்றும் துறைசார் நிபுணர்கள் 15 பேரைக் கொண்ட குழுவினர் தமக்கு வழங்கப்பட்ட வாய்ப்பைப் பயன்படுத்தி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் மிகவும் நாகரீகமான முறையில் இலங்கையில் முஸ்லிம் சமூகம் எதிநோக்கி வரும் பிரச்சினைகள்  தொடர்பிலும், அரசின் மௌனம் மற்றும் துரித நடவடிக்கைகளை எடுக்கத் தவறுகின்றமை, பாதுகாப்புத் தரப்பின் துணையுடன் இனவன்முறைகள் அரங்கேற்றப்பட்ட விவகாரம், மற்றும் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு அச்சத்துடன் வாழ நிர்ப்பந்திக்கப்படும் சூழ்நிலை என  பல்வேறு விடயங்களை முன் வைத்து தொடர் கேள்விகளை முன் வைத்தனர்.

அத்துடன், லண்டன் தூதரகம் ஐக்கிய இராச்சியம் வாழ் முஸ்லிம் சமூகத்துக்குள் அரசியலைப் புகுத்தி செயற்படுவதும் கூட்டத்தின் ஆரம்பத்திலேயே சுட்டிக்காட்டப்பட்டது.

'உங்களுக்குள்ளேயே ஒற்றுமையில்லை' என காரணங் காட்டி இச்சந்திப்பின் நோக்கத்தை திசை திருப்ப முனைந்த மைத்ரி அதனை சாதிக்க முடியாத நிலையில், அங்கு சென்றிருந்த 15 பேர் கொண்ட குழுவினால் முன் வைக்கப்பட்ட கேள்விகளுக்கும் மழுப்பல் பதில்களைத்  தர முனைந்தமை வெட்கத்துக்குரியது.

ஈற்றில், ஆகக்குறைந்தது மூன்று இடங்களில் தன்நிலை மறந்து மைத்ரிபால சிறிசேன தடுமாறிய அதேவேளை, முஸ்லிம்களுக்கு எதிராக அவர் முன் வைத்த பல குற்றச்சாட்டுகளுக்கும் அங்கு பதிலளிக்கப்பட்டது.

முஸ்லிம் சமூகத்தின் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் பெரும்பாலும் இனவாதிகளால் முன் வைக்கப்படும் கருத்துக்களையே மைத்ரிபால பிரதிபலித்திருந்த அதேவேளை முஸ்லிம் சமூகத்துக்கு எக்கச்சக்கமான பதவிகளை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.



எனினும், அப்பதவிகள் சாதாரண மக்களின் இயல்பு மற்றும் சுதந்திர வாழ்க்கைக்கு எவ்விதத்திலும் உதவவில்லையென சுட்டிக்காட்டப் பட்ட தருவாய்களில் முகங்கோணிய மைத்ரிபால சிறிசேன, கேள்விகளின் உள்ளார்ந்த அர்த்தங்களைப் புரிந்து கொண்டு அமைதியாக இருக்கவும் விடையின்றித் தவிக்கவும் நிர்ப்பந்திக்கப்பட்தாக சோனகர்.கொம் செய்தியாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதியொருவரின் இந்நிலை பரிதாபமாக இருந்தது மாத்திரமன்றி, இனவாதமற்ற, ஐக்கிய இலங்கை, நல்லாட்சி என்பன வெறுங் கனவாகப் போய் விட்டதையே உணரக் கூடியதாக எமது செய்தியாளர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்சந்திப்பில் அரசாங்கத்தின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா மற்றும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவும் கலந்து கொண்டிருந்ததுடன் குறித்த சந்திப்பு 1 மணி நேரம் 10 நிமிடங்கள் நீடித்திருந்தது.

-ME

1 comment:

Prof Siddique said...

My3 is a big disappointment to the Muslim community. In addition to being an uncaring leader towards Muslims, he has actually bared his hidden anti Muslim racism. His clever manoeuvre to get Gnanasara released and hobnobbing with the same fellow in Sri Lanka and during his recent visit to Japan. Add to this his lackadaisical attitude towards the attacks on Muslims in the Kandy district and Ampara. His conduct in this interview also proves the point.

Post a Comment