காஸாவில் இஸ்ரேலிய தாக்குதல்களினால் 27 பேர் உயிரிழந்து ஆயிரக்கணக்கானோர் காயமுற்றுள்ள நிலையில் மேற்குலகம் வாய்மூடியிருப்பதற்கு கண்டனம் வெளியிட்டுள்ளார் ஐக்கிய இராச்சிய நாடாளுமன்றின் எதிர்க்கட்சித் தலைவரும் தெழிற்கட்சித் தலைவருமான ஜெரமி கோர்பின்.
இஸ்ரேலிய படுகொலைகளைக் கண்டித்து லண்டனில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட போதே தனது கண்டனத்தை வெளியிட்டுள்ள அவர், சர்வதேச விசாரணை கோரும் ஐ.நா தீர்மானத்துக்கு ஐக்கிய இராச்சிய பிரதமர் ஆதரவளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரேலின் கண்மூடித்தனமான தாக்குதல்களில் பலஸ்தீன உயிர்கள் தொடர்ந்து பறிபோகின்ற போதிலும் உலகம் தொடர்ந்தும் மௌனித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment