ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மத்திய குழு இன்று கூடவுள்ள நிலையில் தற்போதைய செயலாளர் துமிந்த திசாநாயக்கவை நீக்கிவிட்டு அமைச்சர் தயாசிறியை அப்பதவிக்கு நியமிக்கும் படி 'குரூப் 16' உறுப்பினர்கள் கோரிக்கை முன் வைக்கவுள்ளதாக அறியமுடிகிறது.
பிரதமர் ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்து வாக்களித்த தயாசிறி, தொடர்ந்தும் தமது நிலைப்பாட்டில் உறுதியான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியினர் தயாசிறி உட்பட்ட குழுவினருக்கு எதிராக பிரயோகிக்கும் அழுத்தத்துக்கு அடி பணியப் போவதில்லையெனவும் சு.க தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையிலேயே தயாசிறிக்கு செயலாளர் பதவியைக் கோரும் முயற்சி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment