ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டாட்சியில் தொடர்ந்தும் நிலைப்பதில் அர்த்தமில்லையெனவும் உடனடியாக வெளியேற வேண்டும் எனவும் தெரிவிகக்கிறார் பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால.
அரசாங்கம் இரு அணிகளாகப் பிரிந்திருப்பது வெட்ட வெளிச்சமாகத் தெரியும் நிலையில் தொடர்ந்தும் கூட்டாட்சி நிலைப்பதில் அர்த்தமில்லையென மேலும் விளக்கமளித்துள்ளார் திலங்க.
இதேவேளை ரணிலை எதிர்த்து வாக்களித்த 16 பேரும் அடுத்த நாடாளுமன்ற அமர்வின் போது எதிர்க்கட்சியில் அமர்வார்கள் என மஹிந்த ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டுள்ளமையும் முன்னதாக நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட வந்த ஐ.தே.கட்சியினரை தாமே தடுத்து வாக்களிப்பின் போது எதிர்ப்பைக் காட்டும்படி அறிவுறுத்தியதாகவும் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment