நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாளை 2ம் திகதியே முடிவெடுக்கவுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த.
பிரதமரை பதவி நீக்குவதற்கு மைத்ரி அணியும் ஆதரவளித்து வருவதாக மஹிந்த தரப்பு பாரிய பிரச்சாரங்களை முன்னெடுத்து வரும் நிலையில் சுதந்திரக் கட்சி நாளை 2ம் திகதி கூடி முடிவெடுக்கவுள்ளதாக சுசில் தெரிவிக்கிறார்.
இதேவேளை, மைத்ரிபால சிறிசேன - ரணில் விக்கிரமசிங்க இடையிலான விசேட சந்திப்பொன்று நிகழ்ந்துள்ளதுடன் ரணிலின் பொறுப்பின் கீழிருந்த மத்திய வங்கி மற்றும் இளைஞர் சேவைகள் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment