திருகோணமலை ஆசிரியர்களின் ஹபாயா பிரச்சினையின் பின்னால் இந்துத்துவ அடிப்படைவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் மற்றும் புலி சாயம் கொண்ட கட்சிகள் உள்ளமை தெரிய வந்துள்ளதாகவும் இது தொடர்பில் கலந்துரையாட எதிர்கட்சி தலைவர் இரா சம்பந்தனை அழைத்தால் எம்மை அவமதிக்கும் முறையில் நடந்து கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் குற்றம் சாட்டியுள்ளார்.
ஊடகவியலாளர் ஒருவரிடம் குறித்த பிரச்சினை தொடர்பாக தொலைபேசி ஊடாக உரையாடிய அவர் மேற்படி பிரச்சினை எமது அடிப்படை உரிமை ஆகும்.இதனை விட்டு விட முடியாது.தேசிய பிரச்சினையாக மாற்றாமல் எமக்குள் நாமே தீர்வினை பெறுவதற்காக கடந்த 3 நாட்களாக இரா சம்பந்தன் உள்ளிட்ட தமிழ் தரப்புகளிற்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டேன்.இதுவரை எவரும் எம்முடன் கதைக்க முன்வரவில்லை.பதிலளிக்கவுமில்லை .
இதனால் தான் எமது தலைவர் றிசாட் பதியுதீன் எதிர்கட்சி தலைவர் இரா சம்பந்தனுக்கு கடிதம் மூலமாக அறிவித்துள்ளார்.
எனினும் கடந்த காலங்களில் எம்முடன் அரசியல் விடயங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முரண்பட்டதற்காக தான் தற்போது பழிவாங்குவதாகவே இந்தசெயற்பாட்டை நான் பார்க்கின்றேன்.
இந்த ஹபாயா பிரச்சினைக்கு பின்னால் இந்துத்துவ அடிப்படைவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தமிழ் தேசிய முற்போக்கு முன்னணி போன்ற புலி சாயம் கொண்ட கட்சிகள் உள்ளமை தற்போது தெரிய வந்துள்ளது.
இவ்விடயம் தொடர்பாக எதிர்வரும் திங்கட்கிழமை ஜம்மியதுல் உலமா சபையுடன் பேச்சுவார்த்தை ஒன்று நடைபெறவுள்ளது.தற்காலிக தீர்வொன்று எட்டப்பட்டுள்ளது(என்ன தீர்வு என்று சொல்லவில்லை).ஆனால் என்னால் ஆன சகல தரப்புடனும் இவ்விடயம் தொடர்பில் கதைத்துள்ளேன் என கூறினார்.
-Farook Sihan
No comments:
Post a Comment