நம்பிக்கையில்லா பிரேரணை ரணில் - மஹிந்தவின் கூட்டு நாடகம் என தெரிவிக்கிறது ஜே.வி.பி சார்பு இலங்கை விவசாயிகள் சம்மேளனம்.
மஹிந்தவை அவ்வப்போது காப்பாற்றி வரும் ரணிலின் செயற்பாடுகளுக்கு நன்றிக்கடனை செலுத்தும் வகையிலேயே மஹிந்த தற்போது நடந்து கொள்வதாகவும் அதனை வெளிப்படுத்தும் நாடகமே நம்பிக்கையில்லா பிரேரணையும் மேலும் விளக்கமளித்துள்ளார் அமைப்பின் தலைவர் நாமல் கருணாரத்ன.
கூட்டாட்சி அரசு, ராஜபக்ச குடும்பத்துக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக காட்சிப்படுத்தும் நாடகங்களின் போது ரணில் விக்கிரமசிங்க தலையிட்டு சலுகைகளை வழங்கி வருவதற்கு கைமாறாக தற்போது தனது பங்குக்கு நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வந்து அதிலிருந்து ரணிலைக் காப்பாற்றும் நாடகத்தை அரங்கேற்றுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment