பிரதமரைப் பதவி நீக்கும் முயற்சி மற்றும் அரசைக் கவிழ்க்கும் முயற்சியிலும் தோல்வி கண்டுள்ள மஹிந்த அணி அடுத்ததாக எதிர்க்கட்சித் தலைவர் பதவியையாவது பெற்றுக்கொள்வதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது.
இந்நிலையில், அவ்வாறு ஒரு சூழ்நிலை வந்தால் தற்போதைய கூட்டு எதிர்க்கட்சித் தலைவர் தினேஷ் குணவர்தனவை விட சிரேஷ்ட உறுப்பினரும் ஸ்ரீலசுகட்சி உறுப்பினர்கள் மத்தியில் மதிக்கப்படுபவருமான சுசில் பிரேமஜயந்துக்கு அப்பதவியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என குரூப் 16 பிரமுகர்கள் கூட்டு எதிர்க்கட்சியுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர்.
எனினும் கூட்டாட்சியே தொடரப்போவதாக ரணில் அறிவித்துள்ளமையும் இதன் பின்னணியில் நாடாளுமன்றில் மாற்றங்கள் எதுவும் வரப்போவதில்லையெனவும் அவதானிகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment