அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருக்க டொனால்ட் ட்ரம்புக்கு தகுதியில்லையென பல உயரதிகாரிகள் தெரிவித்து வரும் தொடர்ச்சியில் முன்னாள் FBI பிரதானி ஜேம்ஸ் கொமியும் இணைந்துள்ளார்.
ட்ரம்புக்கு மனநலன் பாதிப்பு போன்ற ஊகங்களுக்குள் தான் செல்லவிரும்பவில்லையென தெரிவித்துள்ள அவர், இப்பதவியில் அமர்ந்திருக்கத் தேவையான 'நேர்மை' ட்ரம்புக்கு இல்லையெனவும் தொடர்ச்சியாக பொய்யுரைத்து, பெண்களை வெறும் சதைப் பிண்டங்களாக மாத்திரமே பார்க்கும் ட்ரம்ப், அப்பதவியில் வீற்றிருக்கக் கூடாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் அதிரடியாக பதவி நீக்கப்பட்டிருந்த நிலையில் ஜேம்ஸ் கொமி நேற்றைய தினம் அமெரிக்க தொலைக்காட்சியொன்றுக்கு இவ்வாறு பேட்டியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment