பிரதமா ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைணை கொண்டுவரப்பட்டதையடுத்து பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு தான் வற்புறுத்தப்பட்டதாகவும் இருப்பினும் தலைவருக்கு முதுகில் குத்த முடியாது என்பதால் தான் ஏற்றுக்கொள்ளவில்லையெனவும் தெரிவித்துள்ளார் அமைச்சர் ராஜித சேனாரத்ன.
2015ல் சிறிசேனவை எதிர்த்தவர்களே ரணிலைக் கவிழ்க்க முயற்சி செய்ததாகவும் அப்போதிலுருந்து தான் இரு தரப்புக்கும் பாலமாக இருந்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கூட்டு எதிர்க்கட்சி சார் லங்கா சமசமாஜ கட்சி உறுப்பினர்கள் கூட தன்னை அணுகி பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ள வற்புறுத்தியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment