கல்குடா இளைஞர் உலமாக்கள் ஒன்றியத்தின் இவ்வருடத்துக்கான களப் பயணம் கடந்த செவ்வாய்க்கிழமை எறிக்கிலம் கட்டுப் பாலத்தடியில் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில் அமைப்பின் தலைவர் மெளலவி எஸ்.எச்.அஷ்ரப் “சிறாஜி” செயலாளர் மெளலவி எஸ். அலாவுதீன் “சலபி” அமைப்பின் ஆலோசகர் எம்,ஐ.ஹாமித் “சிறாஜி” ஆகியோர் உற்பட அமைப்பின் ஏனைய நிர்வாக உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இன் நிகழ்வில் போது அமைப்பின் தலைவர் மெளலவி எஸ்,எச்.அஷ்ரப் “சிறாஜி” அவர்களின் தலைமையில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.இதன் போது அமைப்பின் எதிர் கால செயற்பாடுகள், உலமாக்களின் வாழ்வாதார மேன்பாடுகள்,தேவை உடைய மாணவர்களின் கல்வி மேன்பாடுகள், மற்றும் சமூக சேவைகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டதோடு இவ்வமைப்பின் இஸ்தாபக தலைவரும்,தற்போதைய கோரளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதேச சபை உறுப்பினருமான மெளலவி எம்,ஐ.ஹாமித் “சிறாஜி”அவர்களுக்கு அமைப்பின் உபதலைவர் மெளலவி யூ,எல். தஜ்ஹுர் “பலாஹி” அவர்களினால் நினைவுச் சின்னமும் வழங்கி கெளரவிக்கப்பட்டதோடு வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டது.
-எஸ்.ஐ.எம்.நிப்ராஸ், வாாழைச்சேனை.
No comments:
Post a Comment