மியன்மார் அரசு திட்டமிட்டு நடாத்தி வரும் இனச்சுத்திகரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள ரோஹிங்யர்களுக்கு அடைக்கலம் கொடுக்கத் தாம் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார் பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடர்ட்.
மியன்மாரின் இனச்சுத்திகரிப்பை சர்வதேசம் கண்டும் காணாமலிருப்பதாக தனது அதிருப்தியையும் வெளியிட்டுள்ள அவர் ஐரோப்பாவுடன் இணைந்து அகதிகளின் ஒரு பகுதியினரைத் தாம் ஏற்றுக்கொள்ளத் தயார் என பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
எனினும், இதற்கு முன் ஆங் சூ கீக்கு ஆதரவாகவும் அவர் குரல் கொடுத்திருந்தமையும் சர்வதேச சமூகத்தின் நடவடிக்கைகளை பகிரங்கமாக விமர்சித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment