O/L: அரபு மொழியில் சித்தியெய்திய மாணவர்க்கு புலமைப்பரிசில் - sonakar.com

Post Top Ad

Sunday, 22 April 2018

O/L: அரபு மொழியில் சித்தியெய்திய மாணவர்க்கு புலமைப்பரிசில்



கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில்  பாடசாலை பரீட்சார்த்தியாக தோற்றி அரபு மொழியில் அதிவிசேட சித்தி (பெற்று அரசபாடசாலைகளில் தமது கல்விப் பொதுத் தராதர உயர்தர கல்வியை தொடரவிருக்கும் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் ‘United We Achieve’  நிறுவனம்தீர்மானித்துள்ளது.

இத்திட்டம் அரச பாடசாலைகளில் அறபு மொழி கற்பித்தலை ஊக்குவிப்பதற்கான ஒரு முன்னோடித்திட்டமாகும்இது அறபுக்கல்லூரிகளில் கல்வி கற்கும்மாணவர்களுக்கு ஏற்புடையதல்ல.



கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை- 2017 இல் அரபு மொழி பாடத்தில் (சித்திபெற்ற மாணவர்கள் இப்புலமைப்பரிசிலை பெற்றுக்கொள்ள தமதுமுழுவிபரங்களுடன் சாதாரண பரீட்சை பெறுபேற்று பத்திரத்தின் நிழற்பிரதி ஒன்றையும் இணைத்து கீழ்காணும் முகவரிக்கு அல்லது மின்னஞ்சல்முகவரிக்கு தங்களது  விண்ணப்பங்களை மே மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு  தெரிவிக்கப்பட்டுள்ளது.

The President
“United We Achieve”
344, Al Hilal Road
Sainthamaruthu 15


-எம்.எஸ்.எம்.ஸாகிர்

No comments:

Post a Comment