பாதுகாப்பு படைகளில் சேர்வதற்கு முஸ்லிம்கள் ஆர்வம் காட்டுவதில்லையென லண்டனில் வைத்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்திருந்த நிலையில், கடந்த கால அரசுகளில் எப்போதுமே முஸ்லிம் ஒருவர் ஆளுநர் பதவி வகித்து வந்துள்ள சம்பிரதாயம் உங்கள் அரசில் இல்லையே என அவரிடம் வினாத் தொடுக்கப்பட்டது.
கடந்த 17ம் திகதி முஸ்லிம் புலம்பெயர்ந்தோர் அமைப்பின் சந்திப்பில் வைத்து முஸ்லிம் சமூகம் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து மைத்ரிபால சிறிசேன விளக்கமளித்து வந்தார். இந்நிலையில், ஆளுனர் பதவிக்குத் தகுதியான முஸ்லிம் ஒருவர் இல்லாமல் போனாரா முன்னைய அரசில் பேணப்பட்டு வந்த சம்பிரதாயங்கள் கைவிடப்பட்டுள்ளனவா என்பதை அறிந்து கொள்ள விரும்புவதாக வினவப்பட்டது.
இதற்கு பதிலளித்த மைத்ரி தனது அரசிலேயே முஸ்லிம்களுக்கு அதிக அளவு பதவிகளை அள்ளி வழங்கியுள்ளதாக விளக்கமளித்திருந்தார். எனினும், பல்வேறு அரச நிறுவனங்களிலும் முஸ்லிம் அதிகாரிகள் உயர் நிலையை அடைவது கடினமாக இருப்பது குறித்து அங்கு மைத்ரிபால சிறிசேனவுக்கு எத்தி வைக்கப்பட்டது. இது தொடர்பில் அண்மையில் முஸ்லிம் கவுன்சிலும் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment