ஆகக்குறைந்தது ஏழு மேலதிக வாக்குகளைப் பெற்று நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்படும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார் கூட்டு எதிர்க்கட்சியின் உதய கம்மன்பில.
அவரது கணிப்பின் படி நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 58 வாக்குகள் மேலதிகமாக கிடைக்கும் எனவும் ஆகக்குறைந்தது ஏழு வாக்குகளாவது கிடைக்கப் பெற்று ரணில் விக்கிரமசிங்கவைத் தோற்கடிப்பது உறுதியெனவும் தெரிவிக்கிறார்.
சட்ட ஒழுங்கை நிலை நாட்டத் தவறிய ரணில விக்கிரமசிங்க, மத்திய வங்கி பிணை முறி மோசடி குற்றச்சாட்டையும் சுமந்தவராக நாளை மறுதினம் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முகங்கொடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment