விவசாயத்துக்கு முறையான எதிர்காலமில்லாத நிலையில் 05 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் ஐந்து லட்ச ரூபா செலவில் மேற்கொண்ட விவசாயத்தின் விளைவில் பெறப்பட்ட பூசணிக்காய்களை நேற்றைய தினம் தன்சல் மூலம் விவசாயி ஒருவர் பொது மக்களுக்கு இலவசமாக வழங்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கலேவெல, மக்குலுகஸ்வேவ பகுதியைச் சேர்ந்த ஜயவீர என அறியப்படும் விவசாயியே இவ்வாறு தனது விளைச்சலை தன்சல் கொடுத்துள்ளார்.
பிரதேசத்தின் ஏனைய விவசாயிகளின் உதவியோடு அறுவடையை மேற்கொண்ட குறித்த நபர், அவற்றை ஏனையோரின் வாகனங்களில் ஏற்றிச் சென்று கலேவெல - கலாவெவ பிரதான வீதியில் இவ்வாறு பொது மக்களுக்கு இலவசமாக கொடுத்துள்ளதோடு தான் வேறு ஏதாவது தொழிலைத் தேடிக் கொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment